முதல்வர் : தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே
எல்லோரும் : ஆமென்
முதல்வர் : அமலமரி அன்னையின் அன்பர்களே! இறை இயேசுவின் அன்பும் தூய ஆவியாரின் நடப்புறவும் உங்களோடு இருப்பதாக!
எல்லோரும் : உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
(தூய ஆவியாருக்கு பாடல் பாடும் போது நற்செய்தியை வாசிப்பவர்கள் நான்கு மெழுகுவர்திகளை ஏற்றலாம்)
தூய ஆவியாருக்கு பாடல்:
இறைவனின் ஆவி நிழலிடவே
இகமதில் அவர் புகழ் பரவிடவே
நம்மை அழைத்தார் அன்பில் பணித்தார் - அவர்
பணிதனைத் தொடர்ந்திடவே (2)
1. வறியவர் செழிப்பினில் வாழ்ந்திடவும்
அடிமைகள் விடுதலை அடைந்திடவும் (2)
ஆண்டவர் அரசில் துயரில்லை என
வானதிர பறைசாற்றிடவும்
2. குருடரும் ஒளியுடன் நடந்திடவும்
குவலயம் நீதியில் நிலைத்திடவும் (2)
அருள் நிறை காலம் அவனியிலே
வருவதை வாழ்வினில் காட்டிடவும்
(அமர்ந்து கொள்ளுவோம்)
முன்னுரை
முதல்வர் : இறை இயேசுவில் பிரியமுள்ள நண்பர்களே! இறைவனின் பெயரால் உங்களை வரவேற்கின்றேன். எரிகின்ற திரிகளாய் இருங்கள் என்ற புனித இயூஜீனின் எண்ணங்களோடும் சிந்தனைகளோடும் நாம் பயணிக்க இருக்கின்றோம். இன்றய இந்த வழிபாட்டு கூட்டத்தில் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அதனது ஆன்மிக நிலையையும் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். எமது சாட்சிய வாழ்வு கிறிஸ்துவின் ஒளியிலே இருந்து உலகை அவரது சிலுவையின் கண்களோடு காண்பதேயாகும். ஆகவே, எமது சிந்தனைகள், எண்ணங்கள் செயல்கள் அவர் வழி செல்ல இன்றயை பொழுதில் அவரின் அருள் கேட்டு மன்றாடுவோம்.
அன்பார்ந்தவர்களே! இந்த வழிபாடு ஒழுங்கானது, முதலாவதாக ஒவ்வொருவரும் ஒரு நற்செய்தி பகுதியை எடுத்து வாசிக்க வேண்டும். அதன் பின் அந்த நற்செய்தியின் கருப்பொருளை ஒரு செபத்தோடு கூடிய வேண்டுதலாக ஒப்புக்கொடுப்போம்.
லூக்கா : 4:16-19
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: 'ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்சி றைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்ஆ ண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும்அவர் என்னை அனுப்பியுள்ளார்.'
இது இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி
கிறிஸ்துவே உமக்கு புகழ்.
திருப்பாடல் 9:1-9
உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்
வியத்தகு உம்
செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.
உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்;
உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்
உன்னதரே, உமது பெயரைப்
போற்றிப் பாடுவேன்.
என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்;
உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்
நீர் நீதியுள்ள நடுவராய்
அரியணையில் வீற்றிருக்கின்றீர்;
என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர்.
உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்
ஒடுக்கப்படுவோருக்கு
ஆண்டவரே அடைக்கலம்;
நெருக்கடியான வேளைகளில்
புகலிடம் அவரே.
உங்கள் பதிலுரையாக: ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்
மன்றாடுவோமாக: எல்லாம் வல்ல இறைவா! மனிதனை உமது சாயலாகவும் உமது பாவனையாகவும் படைத்து, படைப்புக்களில் சிறந்த படைப்பாக எம்மை படைத்தீரே! எமது பாவ வாழ்வினால் இழந்து போன அருளை மீண்டும் பெற உமது திரு மகனை எமக்கு தந்தீரே. அவரது பாஸ்கா மறை நிகழ்வுகளால் எமது பாவ இயழ்பு அகன்று தூய வாழ்வை எமக்கு பெற்று தந்தீரே. எழைகளின் உள்ளங்களை கண்டுகொள்ளவும், துன்ப துயரங்களால் துவண்டு கிடக்கும் எல்லோரையும் அரவணைக்கவும், வாழ்வில் விடுதலை தேடும் இதயங்களையும், பல நிலைகளில் அடிமைபட்டு பார்வையற்று கிடக்கும் எம்மவரை தேடி விடுவிக்கவும் எமக்கு சக்தியையும் பலத்தையும் தாரும். இதுவே எமது சாட்சிய வாழ்வாகட்டும். இதனால் என்றும் உமது அன்புக்கு சான்று பகிரும் தியாகிகளாய் மிளிர அருள்வீராக. இவற்றை எல்லாம் உம்திரு மகன் இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். ஆமென்.
மத்தேயு: 5:43-45,48
'உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', 'பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக' எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 'இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
இது இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி
கிறிஸ்துவே உமக்கு புகழ்.
திருப்பாடல் 19:1-4
உங்கள் பதிலுரையாக: வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன்
ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு
அச்செய்தியை அறிவிக்கின்றது;
ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு
அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.
உங்கள் பதிலுரையாக: வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன்
அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;
அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
ஆயினும், அவற்றின் அறிக்கை
உலகெங்கும் சென்றடைகின்றது;
உங்கள் பதிலுரையாக: வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன்
அவை கூறும் செய்தி
உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது,
இறைவன் அங்கே கதிரவனுக்கு
ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.
உங்கள் பதிலுரையாக: வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன்
மன்றாடுவோமாக: கருணயின் உற்றே இறைவா! எகிப்திய அடிமை தனத்தில் இருந்த இஸ்ராயேல் மக்களை மோயிசன் வழியாக மீட்டீNர் மன்னாவை கொடுத்து மகிழ்வளித்தீNர் தண்ணீரை கொடுத்து நிறைவளித்தீNர் வாக்களிக்கப்பட்ட நிலத்தை கொடுத்து வாழ்வு தந்தீரே. உமது பராமரிப்பை நன்கு உணர்ந்தவர்களாய், நீர் காட்டிய மாபெரும் அன்பை, சிலுவை தியாகத்தை பாராபட்சம் காட்டாது அனைவரிலும் பகிர்ந்து கொள்ளவும், நீர் செய்கின்ற அளவிட முடியாத நன்மைதனங்களை நாளும் கண்டுகொள்ளவும் அருள் புரிவீராக. நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்க வரம் தருவீராக. இவற்றை எல்லாம் உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். ஆமென்.
(புனித இயூஜின் டீ மசனட் அவர்களை பற்றி எழுதப்பட்ட நூல்களில் இருந்து சில வரிகளை வாசித்து சிந்திக்கலாம்)
அருகில் இருப்பவர்களின் கரங்களை பற்றிக்கொண்டு பின்வரும் மன்றாட்டுக்களை சொல்லி செபிக்கலாம்.
மன்றாட்டுக்களுக்கு பதிலுரையாக: ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டுக்களை ஏற்றருளும்
எம் திருச்சபை அன்பிலும் பிரமாணிக்கதிலும் வளர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்...
ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டுக்களை ஏற்றருளும்
எமது குடும்பங்கள் அன்பு பிணைப்பால் கட்டப்பட்டு நம்பிக்கையில் நாளும் வளர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்...
ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டுக்களை ஏற்றருளும்
எமது பிள்ளைகள் ஞானத்திலும் அறிவிலும் தேவ பயத்திலும் நாளும் வளர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்...
ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டுக்களை ஏற்றருளும்
நாட்டில் நிலையான அமைதி கிடைக்கவும் மகிழ்சியும் மன நிறைவும் ஆசீர்வாதங்களாய் கிடைக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்...
ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டுக்களை ஏற்றருளும்
குடும்பங்களில் நிலையான நிம்மதி கிடைக்கவும் பொருளாதார சுபீட்சம் பெருகவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்...
ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டுக்களை ஏற்றருளும்
விண்ணக தந்தையை நோக்கி செபம்:
புனித இயூஜின் டி மசனட்டை நோக்கி செபம்
அன்பின் ஆண்டவரே ! எம் அன்பின் ஊற்றும் நற்செய்தியுமான நம் ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவை பின்தொடர என எமது நிறுவுனர் புனித இயூஜின் டி மசனட்டை அழைத்த்தீரே ! அவ்வழைப்பை உணர்ந்து , ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும் வாஞ்சையோடும், திருச்சபையின் தேவையறிந்து தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்த எமது புனிதரை எமக்கு தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம் . இறையரசை பார் எங்கும் பரப்பிடும் பணியில் பல அமலமரித் தியாகிகளை உருவாக்கி மறைபோதக நாடுகளுக்கு அனுப்பி அவர்கள் பணி வாழ்வில் நற்செய்திக்கு சாட்சிகளாய் வாழ தினமும் செபித்த இயூஜின் டி மசனட்டே ! உமது பரிந்துரையினால் தூய பிராணிக்கமான வாழ்வுக்கும், அதனூடாக இறைபணிக்கும் அழைக்கும் இயேசுக் கிறிஸ்துவின் மேல் அன்புத் தீ பற்றி எரியச் செய்தருளும் . இதன் அடையாளமாக சிறந்த குடும்பங்களையும் , குழுமங்களையும் கட்டியெழுப்ப செய்தருளும் . இதனால் ஏழைகளுக்கும் , கைவிடப்பட்டோருக்கும் நற்செய்தி அறிவிக்கும் தியாகச் சிந்தையை அளித்தருளும் . இவ்வுலகத்தின் மட்டிலும் அதன் திருச்சபையின் மட்டிலும் அக்கறை உள்ளவர்களாக ஆக்கியருளும் . அன்பின் அம்மா அமல மரியே ! தூய்மையின் ஒளி விளக்கே ! கிறிஸ்துவை நாம் வாழ்ந்திட வழி காட்டும் . உமது தளரா நம்பிக்கையையும் , கீழ்படிதலையும் , இறை விருப்பத்தையும் அறிந்து வாழும் வரம் தாரும் , ஆமென் .
குருவானவர் : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!
எல்லோரும் : உம்மோடும் இருப்பாராக.
குருவானவர் :எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசிர்வதித்து, தனது பாதுகாப்பிலே உங்களை வழிநடத்தி, உங்களுக்கும் இந்த குடும்பத்திற்கும் அமைதியும் அருளும் நிறைவாய் பொழிவராக.
குருவானவர்: ஆமென்
No comments:
Post a Comment