Wednesday, 14 August 2024

திருமணம்

 


திருமணத் திருப்பலி

திருமண திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் என் அன்புக்கினிய உறவுகளே! 

இறைவன் இவ்வுலகை படைத்தபோது அவற்றை நல்லது எனக் கண்டார், மனிதனை தனது சாயலாக பாவனையாக, தனது உயிர் மூச்சைக் கொண்டு உருவாக்கி, நல்லது எனக் கண்ட இவ்வுலகை, அவர்களுக்கு காணிக்கையாகக் கொடுத்தார். இது ஓர் அன்பின் பரிசு, உன்னத உறவின் பரிசு, இருமன ஒன்றிப்பின் முன் அடையாளம். இவ் அன்பை இன்று முழுமையாக சுவைக்க, அனுபவிக்க தமது முழு வாழ்வையுமே திருமண திருவருட் சாதனத்தின் வழியாக அர்ப்பணிக்க வந்திருக்கும் திருமண தம்பதினராகிய ............. இவர்களை திரு அவையின் பெயரால் வரவேற்கின்றோம். 

உறவுகள் ஒன்றித்து உயிராக, உணர்வாக பகிர்ந்துகொண்டு,

உள்ளத்தை தொட்டுப் பேசும் உன்னத அன்பை கொடையாகக் கொண்டு,

உலகிற்கு புது உருக்கொடுக்கும் புதிய விழா இது.

இயேசுவை உடைத்துக் கொடுக்கும் போது, 

பலியில் உடைந்திடும் இயேசுவையே நாளும் வாழும் உன்னத குடும்பம் இது.

இவர்கள் இணையும் இவ்வாழ்வு குடும்பத்தை உருவாக்கும் புதிய அருட்கொடையே. 

இன்று இத் திருமண திருவருட்சாதனத்தின் வழியாக இணைந்திடும் இவர்களை இயேசுவின் பாதத்தில் ஒப்புக்கொடுத்து செபிப்போம். 

படைப்பை பாதுக்காக்கும் இறைவன், இவர்கள் அன்பை ஆசீர்வதிக்க வேண்டுகின்றோம்; 

ஒன்றிப்பை எப்பொழுதும் விரும்பும் இறைவன், இவர்களின் இணைந்த வாழ்வை என்றும் எப்பொழுதும் ஆசீர்வதிக்க வேண்டுகின்றோம்; 

இவ் உலகம் தரும் விழுமியங்களை அல்ல, இவர்கள் சந்திக்கும் இன்பத்தையும் துன்பத்தையும் தாங்கி, புதிய பாதை அமைத்திட மன்றாடுகின்றோம்;

இவ்வுலகை பல்கிபெருக ஆசித்த இறைவன், இவர்களுக்கு குழந்தைச் செல்வங்களைக் கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டுகின்றோம்; 

குடும்ப உறவிலே இணையும் இவர்களை எம் பங்கின் காவலியாம், குடும்பங்களின் ஒளிவிழக்காம் அன்னை மரியிடம் இவர்களை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். தனது திருக்குடும்பத்தை அறிந்து, ஆழமாக அன்புசெய்து, இறை விருப்பத்தின் படி வழிநடத்தியது போல, புதிய வாழ்வின் பாதையில் பயணிக்க இருக்கும் இக்குடும்பத்தை தாங்கிச் சென்று, ஆசீர்வதித்து, இவர்களுக்காக பரிந்துபேசி இவர்களுடனே உடன் பயனித்திடவேண்டி இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம். 

இறைமக்கள் மன்றாட்டு

1. நல்ல ஆயனே இறைவா! நீர் உமது திரு அவையை உமது சொந்த உயிராக, உடலாக பேணி பாதுகாத்து வருகின்றீர். திருமண ஒன்றிப்பை, திரு அவைமேல் கொண்ட உமது அன்பினால் எமக்கு எண்பிக்கின்றீர். இத் திரு அவையை களங்கம் இல்லாமல் பாதுகாக்கவும், இதன் வழியாக மக்கள் மீட்படையவும் அருள்புரிய வேண்டுமென்று, ...


2. நல்ல ஆயனே இறைவா! இன்று இத் திருமண திருவருட்சாதனத்தின் வழியாக இணைந்திருக்கும் திரு. திருமதி ... இவர்களை ஆசீர்வதியும். உமது ஆவியின் வல்லமையால் இவர்களை நிறைத்து, தாங்கள் தொடங்கும் இப்புதிய வாழ்வில் என்றும் எப்பொழுதும் நிலைத்து வாழ்ந்திட அருள்புரிய வேண்டுமென்று, ...


3. நல்ல ஆயனே இறைவா! இன்று இப்புதிய குடும்பத்தை எம் திரு அவைக்கு தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். நீர் காட்டிய திருக்குடும்பத்தின் மாதிரி, இவர்களின் குடும்பத்திலும் செழித்தோங்கவும், ஒருவர் மற்றவரை தாங்கிவாழவும், ஒருவர் மற்றவருக்காக விட்டுக்கொடுத்து வாழவும், ஒருவர் மற்றவரில் பரஸ்பர அன்பை கண்டு வாழவும் அருள்புரிய வேண்டுமென்று, ...


4. நல்ல ஆயனே இறைவா! புதிய வாழ்வைத் தொடங்கும் இவர்களுக்கு குழந்தைச் செல்வங்களை அளித்தருளும். இவர்கள் வழியாக ஒரு புதிய தலைமுறையை உருவாக்கவும், இவ்வுலகம் விட்டுச்சென்ற நல்ல, அழகிய விழுமியங்கள் இவர்களின் வாழ்வில் துளங்கிட அருள்புரிய வேண்டுமென்று, ...

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...