நவநாள் வழிபாடு
முன்னுரை
இறை உறவில் இணைந்திட கூடி வந்திருக்கும் எம் அன்பு உறவுகளே! எமது பங்குத் தளத்திரு அவையின் பெருநாளை சிறப்புடன் கொண்டாட எம்மை ஆயத்தம் செய்யும் இம்மூன்றாம் நவநாளில் நாம் கூடிவந்திருக்கின்றோம். இன்று இந்நவ நாளை லங்கா மாதா அன்பியத்தினர் சிறப்பிக்கின்றனர். செபம் குடும்பங்களை அன்பிலும் ஒற்றுமையிலும் பலப்படுத்துகின்றது எனும் இறையியல் சிந்தனையில் நாம் சிந்திக்கவும் தியானிக்கவும் இன்றைய நாள் எம்மை அழைத்து நிற்கின்றது.
புனித வளனாரை எமது பங்கின் பாதுகாவலராக ஏற்று அவரை எமக்கான ஓர் உதாரணமாக முன்னிறுத்துவது மிக அழகானதே. அன்னை மரியாவை முழுமனதுடனே ஏற்றுக்கொண்டு இறை திட்டத்தில் பங்குபெற அவர் வாழ்ந்த சாதாரண வாழ்வின் மூலமும், தனது வாழ்வின் தெரிவுகள் மூலமும், இறைவன் மேற்கொண்ட முழுமையான பற்றுதலின் வழியாகவும் புனித வளனார் இத்திருவுலகமே போற்றும் புனிதர்களில் ஒருவராக திகழ்கின்றார். இன்று குடும்பங்களின் வாழ்வுக்கான தலை சிறந்த உதாரணமாக திகழும் புனித வளனாரைப் பின்பற்றி நாமும் எம்மையும் எமது குடும்பங்களையும் ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். இப்பலியை எமது குடும்பங்களுக்காக ஒப்புக்கொடுத்து சிறப்புக்கும் நாம், விசேடவிதமாக அதன் நன்மைத்தனங்களுக்காக செபிக்க அழைக்கப்படுகின்றோம்.
- புனிதத்துவத்தில் உருவாகும் குடும்பங்கள் புதுமைகள் படைக்கவேண்டி மன்றாடுவோம்
- குடும்பங்கள் மெய்ப்பிக்கும் அன்பும், வெறுமையும், தியாகமும், நல் ஒழுக்கமும் பெருகவேண்டி மன்றாடுவோம்
- கிறிஸ்து இயேசுவுக்காய் அனைத்து போராட்டங்களிலும் துன்பங்களிலும் துணிவுடன் முன்னோக்கிச் செல்லும் வீரத்துக்காய் மன்றாடுவோம்
- சமூகத்திற்காகவும், திரு அவைக்காகவும் உழைக்கும் புதிய எதிர்காலங்களை உருவாக்க வேண்டி மன்றாடுவோம்.
- இறைவன் அமைத்த குடும்பங்களை இறைவன் ஆசீர்வதிக்கவும் எமது கிராமத்தையும், எமது பங்கு திரு அவையையும் பாதுகாக்கவேண்டியும் எம் புனிதராம் புனித வளனாரின் துணை வேண்டி தொடரும் இப்பலியில் மன்றாடுவோம்.
குறிப்பாக இன்று திருப்பலி ஒப்புக்கொடுக்கும் அருட்தந்தையையும், பங்குத்தந்தையையும் மேலும் இப்பலியில் இணைந்திருக்கும் அனைத்து குருக்கள் துறவிகள் அன்பின் இறைமக்கள் அனைவருக்கும் இறை அருளும் ஆசீரும் கிடைக்க வரம்வேண்டி இப்பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
இறைமக்கள் மன்றாட்டு
1. அன்பின் இறைவா! இன்று நாம் எமது திரு அவைக்காக மன்றாடுவோம்
எமது திரு அவையை வழி நடத்த நீர் எமக்கு தந்திருக்கும் திருத்தந்தை ஆயர்கள், குருக்கள் அனைவருக்கும் ஞானத்தையும், வல்லமையையும், பாதுகாப்பையும் அளித்து அவர்களின் வழி அனைத்து இறை மக்களும் இறை மாட்சிகாணும் வரத்தை அளித்திட வேண்டுமென்று, ...
2. அன்பின் இறைவா! எமது பங்கு திரு அவைக்காக மன்றாடுவோம்
எமது பங்கை நேர் வழி நடத்தும் எமது பங்குத்தந்தை, அவரோடு இணைந்து பணியாற்றும் அனைத்து குருக்கள், துறவிகளை ஆசீர்வதியும். இறைவனின் பலியை நாள்தோறும் ஒப்புக்கொடுத்து எமது ஆன்மிக வாழ்வுக்காக போராடும் இவர்களை இறைவன் ஆசீர்வதிக்கவும், இவர்கள் வழியாக இறை திட்டம் எம்மில் செயற்பட அருள்புரிய வேண்டுமென்று, ...
3. அன்பின் இறைவா! எமது மாணவர்களுக்காக எமது பிள்ளைகளுக்காக மன்றாடுவோம்.
அன்பையும் இறை நம்பிக்கையையும் நல் ஒழுக்கத்தையும் கசறட கற்கும் இவர்களின் இதயத்தில், இறை ஞானமும், தெய்வ பக்தி வளரவும், இவர்கள் நோக்கும் பார்வைகள் உயர்ந்திடவும், எண்ணங்கள் செலிர்த்திடவும், குறிக்கோள்கள் மேலோங்கவும் அருள்புரிய வேண்டுமென்று, ...
4. அன்பின் இறைவா! இத்திருப்பலியை ஒப்புக்கொடுக்கும் எம் அனைவரின் குடும்பங்களுக்காக மன்றாடுவோம்
புனித வளனாரின் பாதையில் பயணித்து அவரின் பரிந்துரையில் உருவாகும் எம் அனைத்துக் குடும்பங்களையும் ஆசீர்வதியும். எமக்குள்ளே உருவாகும் ஒற்றுமையும், நாம் விரும்பித்தேடும் அன்பும் அமைதியும், எமக்கு ஆணிவேராக அமையும் தியாகங்களும் நாம் சம்பாதிக்கும் உயர் விழுமியங்களாக மாறிட அருள்புரிய வேண்டுமென்று, ...
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments
Post a Comment