விவிலிய வாசிப்போடு செபிப்போம்
இறைவனுக்கும் பிரியமான அன்பு உள்ளங்களே! எமது பெருவிழா ஆயத்த நாட்களின் இரண்டாவது நாளில் இன்று நாம் கால் பதிக்கின்றோம். இன்றைய நாளில் விவிலிய வாசிப்போடு செபிப்போம் எனும் அழகிய கருப்பொருள் எமது சிந்தனைக்கு தரப்பட்டுள்ளது. இன்றைய வழிபாடுகளை இரண்டாம் அன்பிய இறைமக்கள் சிறப்பிக்கின்றனர்.
இறைவார்த்தை:
புனித யாக்கோபு எழுதிய திருமுகமானது உலகிலே சிதறுண்டு வாழும் அனைத்து பன்னிரெண்டு குலத்து இஸ்ராயேல் மக்களுக்கும் எழுதப்பட்டுள்ளது. சுயநலமற்றஇ இறைவனுக்குகந்த தூய வாழ்வு வாழ இத்திருமுகம் அழைத்து நிற்கின்றது. இதயத்தில் விதைக்கப்பட்ட இறைவனின் வார்த்தையை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனும் அறிவுரையை புனித யாக்கோபு எமக்கு விடுக்கின்றார். புனித மத்தேயு எழுதிய நற்செய்தி கிறிஸ்தவர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையே. எழுத்தில் எழுதப்பட்ட சட்டங்களை அல்லஇ இதயத்தில் எழுதப்பட்ட இறைவனின் வார்த்தையே வாழ்வுதரும் எனும் நம்பிக்கையை உறுதிமொழியாகக் கொடுக்கின்றார். இறைவனின் வார்த்தையே உயிர்இ அதுவே மனுவுருவாகி எம்மிடையே தங்கிய இயேசு என்று மனந்தளர்ந்துபோன கிறிஸ்தவர்களை தேற்றுவதைக் காணலாம்.
ஜுபிலி ஆண்டு:
திருத்தந்தை பிரான்சிஸ்இ இவ்வுலகத்தை இயேசுவின் அன்பினால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் என்பதை தனது ஜுபிலி மடலிலே தெளிவுபடுத்துகின்றார். கிறிஸ்துவின் அன்பிலிருந்து வேதனையோஇ நெருக்கடியோஇ இன்னலோஇ பட்டினியோ நம்மை பிரிக்க முடியாது. நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மை எதுவுமே பிரிக்கவே முடியாது எனும் புனித பவுலின் ஆழ்ந்த வார்த்தைகளை கோடிட்டு காட்டுகின்றர். விவிலியத்தில் இருப்பவை இறைவனின் வார்த்தையேஇ அவை அன்பைத் தாங்கும் எமது செபங்களாக மாறவேண்டும் என்பதே திருத்தந்தையின் விருப்பமாகும்.
எனவே,
எம்மை தாங்கிக்கொள்ளும் இறைவனின் வார்த்தையை இதயத்தில் ஏற்றுக்கொள்வோம். இறைவார்த்தையை பொருளுணர்ந்து வாசிப்பதன் வழியாய் இறைவனை அறிந்துஇ அன்புசெய்ய முடியும். இதுவே உண்மை. இதை இன்று நாம் கற்றுக்கொள்வோம். இறைவனை இலக்கணமாக படைக்கும் இவ்விவிலியம் எமது வாழ்வு எனும் நூலை எழுதுவதாக. இப்புதிய அர்த்தம் தரும் இன்றைய நாளை அவர்பாதம் ஒப்புக்கொடுத்து இப்பலியிலே மன்றாடுவோம்.
யாக்கோபு 1:19-27
திருப்பாடல் 119
மத்தேயு: 24:32-35
இறைமக்கள் மன்றாட்டு
குரு: "விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.” எனும் இயேசுவின் உன்னத வார்த்தைகள் எமக்கு ஓர் புதிய நம்பிக்கையின் கருவியாக அமைகின்றது. அவரது வார்த்தையில் நம்பிக்கை கொண்டவர்களாய் எமது தேவைகளை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. அன்பின் இறைவா! உமது திரு அவையின் பணியாளர்களை ஆசீர்வதியும். உமது வார்த்தையிலே முழு நம்பிக்கைகொண்டு அதை இடைவிடாத பணியார்வத்தால் உலகெங்கும் பறைசாற்றும் உம் பணியாளர்கள் சவால்களுக்கு முகங்கொடுத்து, தீமைகளை வென்று, நன்மைகள் விதைகளாக விதைக்கும் மன தைரியத்தையும் அளித்தருள வேண்டுமென்று,...
2. அன்பின் இறைவா! உமது வார்த்தையே எமது வாழ்வின் செபங்கள், உமது வார்த்தையே எமது வாழ்வின் பாதை என்பதை முழுமனதுடன் நம்பச்செய்தருளும். எம்மைச் சூழ்ந்து காணப்படும் அனைத்து விதமான எதிர்ப்புக்கள், தவறான போக்குகள், பிழையான தீர்மானங்கள், சூழ்ச்சிகள் என்பவை உமது வார்த்தையையை வாழாத எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்பதை ஏற்றுக்கொண்டு அவற்றை விலகி வாழும் வல்லமையை அளித்திட வேண்டுமென்று,...
3. அன்பின் இறைவா! இன்றைய நாளை சிறப்பிக்கும் இரண்டாம் அன்பிய இறைமக்களாகிய எம்மை ஆசீர்வதியும். இன்றைய இறைவார்த்தை வழியாக நீர் எம் அனைவரோடும் பேசியிருக்கிறீர் என்பதை முழுமையாக நம்புகிறோம். அன்பிய இறைமக்களாக ஒன்றிப்பிலும், பகிர்விலும், அன்பிலும், விசுவாச வெளிச்சத்திலும் உம்மை கண்டுபாவிக்கும் அருளை எமக்கு அளித்திட வேண்டுமென்று,...
4. அன்பின் இறைவா! எமது நாட்டிலே அசாதாரண காலநிலை மாற்றத்தால் பாதிப்புறும் அனைத்து உறவுகளையும் ஒப்புக்கொடுக்கின்றோம். அதேவேளை, வெளிநாடுகளிலே, யுத்தத்தால், அகோர வன்முறையால், பசியினால், பட்டினியினால் பாதிப்புறும் மக்களை உம்மிடம் ஒப்புக்கொடுக்கின்றோம். நீரே இவர்களை பொறுப்பெடுத்து, உமது அன்பினால் இவர்களுக்கு மீட்பின் பாதையை காட்டியருள வேண்டுமென்று,...
5. அன்பின் இறைவா! எமது கிரமத்தை நிறைவாய் ஆசீர்வதியும். கடந்துசென்ற எமது வாழ்வுப் பாதையிலே நாம் கண்ட இழப்புக்கள், தோல்விகள், நோய்கள், எதிர்ப்புக்கள்,வீண்பழிகள் மத்தியிலும் எம்மை காத்துவந்ததற்காய் நன்றி கூறுகின்றோம். இனிவரும் காலங்களிலும் நாம் எமது குடும்ப உறவிலே நிலைத்திருக்கவும், கிறிஸ்தவ விசுவாச வாழ்விலே தளைத்தூண்றி நிற்கவும் எமது வாழ்வோடு பயணித்தருள வேண்டுமென்று,...
குரு: வல்லமையின் ஆண்டவரே! உண்மையான மனதோடு உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். நாம் பாவிகள் தான், ஆனாலும் எமக்காய் மரித்தவர் நீர், நாம் உம்மை மறந்தவர்கள் தான், ஆனாலும் நீர் எம்மை அணைத்துக் கொண்டீர். நாம் ஊதாரிகள் தான் ஆனாலும் நீர் எம் மனங்களை அறிந்து அன்புசெய்கின்றீர். பணிவோடு உம்மிடம் எம்மை ஒப்புக்கொடுக்கின்றோம். உமது அருளை எமக்கு நிறைவாய் பொழிந்தருள்வீராக. எங்கள்.
No comments:
Post a Comment