இறைமக்கள் மன்றாட்டு
எமது திரு அவைக்காக மன்றாடுவோம்
இறைவனின் அரசை இவ்வுலகெங்கும் பரப்பி, இயேசுவின் நற்செய்திற்கு பிரமாணிக்கமாய் இருந்து தமது வாழ்வின் அர்ப்பணிப்பாலும், தியாகத்தாலும் அவர் பணி செய்திடும் அனைவரையும் இறைவன் தனது நிறை ஆசீரால் நிரப்பி வழி நடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எமது மறைமாவட்டத்திலே பனியாற்றும் அனைத்து துறவற சபை பணியாளர்களுக்காக மன்றாடுவோம்:
இவர்களது இருப்பும் பிரசன்னமும் மறைமாவட்ட வளர்ச்சிக்கான இவர்களது அர்ப்பணமும் இறைவன் கொடுத்த கொடை என உணரவும் இறைவனின் ஞானமும், வல்லமையும் நிறைவாய் கிடைக்கவும், இவர்களது பணியின் மேன்மையால் பயன்பெறும் அனைத்து மக்களும் இறைவனின் அன்பையும் உடனிருப்பையும் தொடர்ந்து உணரவும் வரம்வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம்.
இறைவா, குடும்பம் என்பது நீர் கொடுத்த கொடை, அதை உருவாக்கி, உறவுகொண்டாட செய்தவர் நீர் என உணரவும், குடும்பம் தருகின்ற பண்புகள், விழுமியங்கள், புன்னியங்கள், ஒழுக்கங்கள் என்பன அதன் அத்திவாரமாக இருப்பதாக. எமது தாயும் தந்தையும் இப்பண்புகளால் எமை அழகுபடுத்தி, இவ்வுலகு அறியச் செய்பவர்களாக மாற்றியருளும். இவ்வுலகின் போக்குகளோடு போராடும் மனத் தைரியத்தையும், செபத்தினால் இவ்வுலகை வெல்லும் ஆற்றலையும் குடும்பம் தர வல்லது என்பதை உணர்த்தியருள வேஎண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நலிவுற்ற குடும்பங்களுக்காக மன்றாடுவோம்
அன்பின் இறைவா, இன்று பண ஆசை, பொருள் ஆசை மீது நாட்டம் கொண்டு குடும்ப பலம் இழந்து, குடும்ப அன்பு இழந்து, குடும்ப ஒன்றிப்பு இழந்து வாழும் எம் குடும்பங்களை ஆசீர்வதித்தருளும். குடும்ப சச்சரவுகளால், பிரட்சனைகளால், பொருளாதார நெருக்கடியினால், சந்தேகங்களினால், பண மோகங்களால், விவாகரத்து வரைக்கும் பிரிந்து சென்ற குடும்ப தம்பதியினர், குடும்பங்களை இணைத்து வைத்தவர் இயேசு என்பதை முழுமையாக அறிந்து தமது வாழ்வின் உயர் பொறுப்பாகிய குடும்பங்களை கட்டிக்காக்கும் வல்லமை கிடைக்கவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: அன்பும் இரக்கமும் நிறைந்த இறைவா!
உம் தாயாகிய அன்னை மரியாவை எமக்கு ஒரு வரலாற்றின் தாயாக தந்தீரே, உமக்கு நன்றி கூறுகின்றோம். அத்தாய் குடும்பத்தை பக்குவமாக பேணிப் பாதுகாத்து, பராமரித்து, இறைதிட்டத்திற்கு ஏற்ப இயேசுவை வளர்த்து கையளித்தது போல, எமது குடும்பங்கள் உமது பாதம் ஒப்புக்கொடுக்கும் வேண்டுதல்கள் உம் பாதம் வந்து சேர்வனவாக. குடும்பங்கள் இவ்வுலகிற்கு கொடுக்கும் உயரிய கொடையாகிய பிள்ளைகளை ஞானத்திலும், அறிவிலும் வளர்த்து அவர்களுக்கு தேவையான வழி நடத்துதலை கொடுத்து காத்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment