Saturday, 13 April 2024

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு வாரம் 14/04/2024

 


திருப்பலி முன்னுரை

'பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்' 

என் அன்புக்கினிய இறை மக்களே! இயேசுவின் இறை வல்லமையும், ஆசீரும் இன்றும் என்றும் உங்களோடு இருப்பதாக. இன்று பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு வாரத்தில் கால் பதிக்கின்றோம். இயேசுவின் உயிர்ப்பின் செய்தி தொடர்ந்தும் சீடர்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையில் உறுதியையும் அளிக்கின்றது. இறப்பு இனி இல்லை, மாறாக இயேசுவோடு வாழ்வு ஒன்று உண்டு என்பதன் அர்த்தம் இன்று தெளிவுபடுத்தப்படுகின்றது. நாம் தீமையின் மக்கள் அல்ல, பாவத்தில் பிறந்தவர்களும் அல்ல, மாறாக நாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், இறைவனுக்கு சொந்தமானவர்கள் எனும் உண்மையை தனது வாழ்வின் அர்பணத்தாலும், தனது பாஸ்கா மறைபொருளின் நிறைவுதலாலும் காட்டிநிற்கின்றார். இதனால் நாம் மகிழ்ந்து கொண்டாடுவோம். 

ஆகவே, எமது உறவை வலுப்படுத்துவோம், மற்றவர்களை மதித்து வாழ்வோம், அன்பு ஒன்றே அழகானது என்பதை அறிக்கையிடுவோம். இயேசு தரும் உயிர்ப்பின் செய்தி எமது வாழ்வில், குடும்பங்களில் தொடர்ந்தும் மிளிர இறைவரம் வேண்டி இப்பலியில் இணைந்திடுவோம்.  

வருகைப் பல்லவி              காண். திபா 65:1,2

அனைத்துலகோரே, கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள், இசை பாடுவீர்; அவரது புகழை அவரது பெயருக்கு இசை பாடுவீர்; மாட்சிபபடுத்துங்கள், அல்லேலூயா.

'உன்னதங்களிலே' சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புதுப்பிக்கப்பெற்ற இளமை உணர்வுடன் உம் மக்கள் என்றும் அக்களிப்பார்களாக் அதனால் உம் சொந்த மக்கள் என்ற மாட்சியை மீண்டும் பெற்றுள்ள நாங்கள் உயிர்ப்பின் நாளுக்காகப் பேரின்பத்துடனும் உறுதியான எதிர்நோக்குடனும் காத்திருக்கச் செய்வீராக. உம்மோடு.

1ம் இறைவாக்கு

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்        3: 13-15, 17-19

வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்று- விட்டீர்கள். ஆனால் கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார்.

பதிலுரைப் பாடல்        திபா: 4

பல்லவி: உமது முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும் ஆண்டவரே.

2ம் இறைவாக்கு  

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி     லூக் 24: 32 

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய இயேசுவே, மறைநூலை எங்களுக்கு விளக்கியருளும். நீர் எம்மோடு பேசும்போது எம் உள்ளம் பற்றி எரியச் செய்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி இறைவாக்கு

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 35-48 

மெசியா துன்புற்று, இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்று எழுதியுள்ளது.

'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படும்.

விசுவாகிகள் மன்றாட்டு

குரு: நாம் இயேசுவின் வார்த்தையைக் கடைப்பிடித்தால், கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; ஆகவே, இயேசுவின் வார்த்தையில் முழு நம்பிக்கை கொண்டவர்களாய் எமது தேவைகளை எடுத்துச் சொல்லி மன்றாடுவோம்.  

1. வல்லமையின் இறைவா, எமது திரு அவையின் பணியாளர்கள் உமது அன்பில் என்றும் நிலைத்திருந்து, அர்ப்பணிப்புடன் பணியாற்ற உமது வல்லமையை அளித்திட வேண்டுமென்று... 

2. வல்லமையின் இறைவா, எமது இளையோர் தமது இளமை வாழ்வை ஒரு கொடையாக ஏற்று, அது தரும் பலத்தையும், வாழ்வின் அழகையும் திரு அவையின் உயர்வுக்கும், இயேசுவின் நற்செய்திக்கும் பயன்படுத்த உமது வல்லமையை அளித்திட வேண்டுமென்று...

3. வல்லமையின் இறைவா, எமது குடும்பங்களின் உயர்வுக்காகவும், வளர்ச்சிக்காகவும் உழைக்கும் எமது பெற்றோர்கள் என்றும் ஆசீர்வதிக்கப்படவும், எந்த நிலையிலும் தமது பிள்ளைகளின் மேல்கொண்ட அன்பை விட்டு விலகிடா வரம் அருளவேண்டுமென்று...

4. வல்லமையின் இறைவா, நாளுக்கு நாள் வீதி விபத்துக்களிலும், மற்றும் போதை பாவனையாலும் தமது உயிரை மாய்த்துக்கொண்டிருப்போர் அதிகரிக்கும் இச்சூழலில், எமது பிள்ளைகள், உறவுகள் அனைவரும் வாழ்வின் பெறுமதி அறிந்து செயற்படவும், தமக்காக வாழும் பல உள்ளங்கள் மத்தியில் தமது பொறுப்பை செவ்வனே உணர்ந்து செயற்பட வேண்டிய அருளை பொழிந்திட வேண்டுமென்று...

 5. வல்லமையின் இறைவா, இவ்வுலகில் நடைபெறும் போர்கள் நிறுத்தப்படவும், பஞ்சம், பசி, பட்டினியால் மாண்டிடும் சமூகம் மீட்கப்படவும் வேண்டிய அருளையும் வல்லமையையும் அளித்திட வேண்டுமென்று... 

குரு: இறைவா, உமது உயிர்ப்பின் மகிழ்ச்சி என்றும் எமது உள்ளங்களுக்கு நிறைவை தருவதாக, அமைதி தேடி அலையும் பல உள்ளங்களுக்கு ஆறுதலைத் தருவதாக, உறவை இழந்து தவிக்கும் பலருக்கு உடன் இருப்பை அளிப்பதாக. இவ் உணர்வுகளோடும் எண்ணங்களோடும் நாம் ஒப்புக்கொடுக்கும் எமது தேவைகளுக்கு நீர் செவிசாய்த்து, அருளை பொழிவீராக. எங்கள்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, அக்களிப்புறும் திரு அவையின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: இப்பெரும் மகிழ்ச்சிக்கு உரிய காரணத்தை நீர் தந்திருப்பதால் அதன் பயனாகிய முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்;.

திருவிருந்துப் பல்லவி           லூக் 24:46-47

கிறிஸ்து பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து மூன்றாம் நாள் உயர்த்தெழ வேண்டும்; அவருடைய பெயரால் மனந்திரும்புது - பாவ மன்னிப்பும் அனைத்து நாடுகளிலும் பறைசாற்ற வேண்டும், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலையான மறைநிகழ்வுகளால் நீர் புதுப்பிக்கத் திருவுளமான உம் மக்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் மாட்சிக்கு உரிய உடலின் அழிவற்ற உயிர்த்தெழுதலுக்கு வந்து சேர அருள்வீராக. எங்கள்;.

Fr. S. James Suren OMI,
Communauté Internationale Des Missionnaires Oblats,
60, Cours Mirabeau, 
13100, Aix-en-Provence,
France. 
+94 77 232 3266,
+33 61 331 3213

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...