இறைமக்கள் மன்றாட்டு
குரு: இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பதன் உட்பொருளை உணர்ந்தவர்களாக, எமது துயரங்களில் துயர் துடைக்கும் இயேசு, எமது போராட்டங்களில் எமைத் தாங்கும் இயேசு, எமது அறியாமைகளில் எமக்கு, அனுபவங்கள் வழி கற்றுத்தரும் இயேசுவிடம் எம்முள் இருக்கும் ஆழமான தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. இயேசுவே, எமது திரு அவையை அன்பு செய்யவும், இவ்வுலக மாந்தர்கள் அனைவரும் உமது பாதை சேரவும் ஓயாது உழைக்கும் அனைத்து பணியாளர்களை ஆசீர்வதித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
2. இயேசுவே, உம்மை பெற்று, உதரத்திலே சுமந்த தாய் அன்னை மரியாவைப் போல, அர்ப்பணம் உள்ள, வாஞ்சை உள்ள, விசுவாசமுள்ள இளைஞர் யுவதிகள் உருவாகிடவும், திரு அவைக்கு அணிசேர்க்கும் புனித உள்ளம்கொண்டு வாழும் வரத்தை அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. இயேசுவே, இன்று மலிந்து கிடக்கும் சினிமா கலாசாரம், போதைக் கலாசாரம், தொலைபேசிக் கலாசாரம், நுகார்வுக்கலாசாரம் - எம் மக்களின் சீரழிவுக்கு காரணமாக அமைகின்றதே. இவ்வுலகத்தின் விழுமியங்களை எதிர்த்துப் போராட ஆற்றலைத் தாரும், எது சரி ஏது பிழை ஏந்த் தீர்ப்பிட விவேகத்தைத் தாரும், உள்ளத்தின் தூய்மையை தொலைத்திடாது உண்மையாய் வாழ நல்ல ஆன்மீகத்தைத் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
4. எம் குடும்பங்களில் தீராத நோயினால் பாதிப்புற்று அல்லலுறும் அனைத்து நோயாளிகளும் சுகம்பெறவும், விபத்துக்கள், அனர்த்தங்கள் வழியே தமது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கும் ஆனைவரின் ஆன்மா முடிவில்லா பேரின்பம் அடையவேண்டி உம்மை மன்றாடுகின்றோம்.
5. இயேசுவே! சிறையிலே வாடுவோர், வெளி நாடுகளுக்குச் சென்று தடுப்பு முகம்களிலே தடுத்தி வைக்கப்பட்டோர் என பலரும் தமது வாழ்வையும் எதிர்காலத்தையும் தொலைத்து நிர்க்கதியான நிலையிலே, அவர்களுக்கு இரக்கமாகவும், ஆறுதலாகவும் அரவணைக்கும் கரங்களாகவும் நீர் இருக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
குரு. என்றுமே கன்னியான மரியாவை இவ்வுலகின் ஒளியாகவும் உப்பாகவும் எமது வாழ்வுக்கான மாதிரியாகவும் தந்த இறைவா! உம்மைப் போற்றுகின்றோம். ஒவ்வொரு ஆன்மாவையும் நேசித்து, நாம் ஒவ்வொருவரும் இறை மாட்சி காணும் ஆர்வத்தை உம் அன்னைக்கு அளித்ததற்காக உமக்கு நன்று கூறுகின்றோம். அவளின் பொருவிழாவைக் கொண்டாட ஆயத்தம் செய்யும் நாம் அவளை ஏறெடுத்துப் பார்த்து பின்பற்றுகின்ற வரத்தை எங்களுக்கு தாரும். நாம் செல்லும் பாதை வரைய துணிவைத் தாரும், இவ்வழ்க்கையை புடமிட அவள் பரிந்துரையை பெற்றுத் தாரும். உம்மிடம் ஒப்புக்கொடுத்த எமது தேவைகளும் மன்றாட்டுக்களும் அர்த்தப் பெறுவனவாக. நாம் விரும்பி கேட்கும் அருளும் ஆசீரும் அவை பெற்றுத்தருவனவாக. இவற்றை எல்லாம் ஏங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து வழியாக உம்மைப் பார்த்து கேட்கின்றோம், ஆமென்.
No comments:
Post a Comment