கடவுளின் தாய் புனித மரியா பெருவிழா - 01/01/2020


 

ஜனவரி 1 ஆண்டவருடைய பிறப்பு விழாவின் 8-ஆம் நாள்

கடவுளின் தாய் புனித மரியா

பெருவிழா - 2020

முன்னுரை 

நன்றியின் உணர்வுகளோடு ஒரே குழுமமாய் ஒன்றுகூடி எமது உள்ளத்து ஏக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றவும், பிறக்க இருக்கின்ற புதிய வருடத்திற்குள்ளே  இறையாசீரோடு பயணிக்க கூடி வந்திருக்கும் அன்பு உள்ளங்களே! இன்று அன்னை மரியளை கடவுளின் தாயாக கொண்டடுகின்றோம்.  கடவுளின் தாயின் பெயரில் இவ்வாண்டு பிறக்கின்றது.  நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும், ஏனென்றால் இந்த வார்த்தைகளில் கடவுளைப் பற்றியும் நம்மைப் பற்றியும் ஒரு அற்புதமான உண்மை உள்ளது. எங்கள் இறைவன் மரியாவில் அவதரித்த தருணத்திலிருந்து, எல்லா நேரத்திலும், அவர் நம் மனித நேயத்தை எடுத்துக் கொண்டார். மனிதன் இல்லாமல் கடவுள் இல்லை; இயேசு தம் தாயிடமிருந்து பெற்றுக்கொண்ட வடிவம் நம்முடையது.  தன் வயிற்றில் தாங்கிய தாயுடன் ஒரு குழந்தை நெருக்கமாக இருப்பதைப் போல, கடவுள் மனிதகுலத்திற்கு நெருக்கமானவர் என்பது தெளிவாகின்றது. ஆகவே, பிறக்க இருக்கின்ற புதிய வருடம் எமக்கு நம்பிக்கையை தர மன்றாடுவோம், வாழ்வில் சுபீட்சம் பிறக்க மன்றாடுவோம். இறைவனின் ஆசீரை இரஞ்சி தொடரும் இப்பலியில் இணைவோம். 


வருகைப் பல்லவி

வாழ்க, புனித அன்னையே, விண்ணகத்தையும் மண்ணகத்தையும் என்றும் ஆளும் அரசரைப் பெற்றெடுத்தவர் நீரே.

அல்லது

காண். எசா 9:1,5; லூக் 1:33 இன்று நம் மீது சுடர் ஒளி உதித்துள்ளது. ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்திருக்கின்றார். அவரது திருப்பெயரோ 'வியப்புக்கு உரியவர், இறைவன், அமைதியின் அரசர், என்றுமுள தந்தை' என அழைக்கப்படும். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது.

'உன்னதங்களிலே' சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, புனித மரியாவின் வளமையான கன்னிமையால் மனிதக் குலத்துக்கு நிலையான மீட்பின் பரிசுகளை வழங்கினீNர் அவரது பரிந்துரையை நாங்கள் உணரவும் அவர் வழியாக வாழ்வின் ஊற்றாகிய உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்க அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படும்.

குரு: கடவுளின் மீட்பு திட்டத்திலே எம்மை இணைத்துக்கொள்ள அன்னை மரியாவின் வாழ்வின் மூலம் இறைவன் எமக்கு பாதை காட்டிச்சென்றுள்ளார். மனுக்குலத்திற்கு தாயாக  இருப்பதனால் அவள் எம்மை நன்கு அறிந்திருக்கின்றாள். இப்புதிய வருடத்திலே எமது விண்ணப்பங்களை எடுத்துக்கூறி மன்றாடுவோம். 

அன்பின் ஆண்டவரே! கிறிஸ்து பிறப்பின் மூலம் எமக்கு அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுத்திருக்கின்றீர். பிறந்த இந்த புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளிலும், நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிலும், நாம் காணும் ஒவ்வொரு வாழ்வியல் யதார்த்தத்திலும்  இந்த மகிழ்ச்சியின் உணர்வை எங்களுடன் கொண்டு வர அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றடுகின்றோம். 

அன்னை மரியாள் தமது வாழ்வின் மூலம் அழகிய திருமகனை பெற்று இவ்வுலகம் வாழ்வு பெற வேண்டுமென்று தன்னை அர்ப்பணித்தவள். நாமும் எமது வாழ்வில் கிறிஸ்துவை கண்டுகொள்ள வேண்டும். ஏழ்மையும், வறுமையும், பிரிவும், துன்பமும், இறப்பும், இழப்பும் வாழ்வை சூழ்ந்துள்ள போது அதை மாற்றியமைக்கும் கருவிகளாக இப்புதிய வருடத்தில் எம்மை மாற்றிக்கொள்ள வரமருள வேண்டுமென்று

கடந்த வருடத்தில் நாம் கண்ட எதிர்பாராத இழப்புக்கள், அழிவுகள், சூழ்ச்சிகள், விரோதங்கள், பழிவாங்கல்கள் அனைத்துமே உடைக்கப்பட்டு இப்புதிய வருடத்தில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட மன்றாடுவோம். அன்னை மரியாள் அனைத்தையும் தனது உள்ளத்திலே இருத்தி சிந்தித்து வந்தது போல எமது வாழ்விலும் தாழ்ச்சியை சம்பாதித்து இறைவனோடு நெருக்கமாக பயணிக்க அருள்புரிய வேண்டுமென்று 

எமது குடும்பங்களில் மகிழ்ச்சி பெருகவும், புரிந்துணர்வு காணவும், அன்பை அனுபவிக்கவும், நம்பிக்கையில் வாழ்வை கட்டியெழுப்பவும் அன்னை மரியா, புனித வளனாரின் திருக்குடும்பம் போல் எமது புதிய குடும்பம் அமைக்க இப்புதிய வருடம் எமக்கு ஆசிகளை பெற்றுத்தர அருள்புரிய வேண்டுமென்று 

குரு: அன்பின் ஆண்டவரே! எமது வாழ்வை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இப்புதிய வருடத்திலே நாம் எடுக்கின்ற தீர்மானங்கள், முயற்சிகள் அனைத்தும் உம்மை மகிமைப்படுத்தவும், உமது திட்டங்கள் எம்மிலே நிறைவேறவும், எம்மை உமது கரங்களிலே தருகின்றோம். நீர் இவற்றை ஏற்று எமக்கு நிறைவேற்றித் தருவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 


காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, நல்லவை அனைத்தையும் கனிவுடன் தொடங்கி நிறைவு காணச் செய்கின்றீர்; உம் புனித அன்னையின் பெருவிழாவில் மகிழ்ச்சி அடைந்துள்ள நாங்கள் உமது அருளின் தொடக்கத்தில் மாட்சி அடைவது போல அதன் நிறைவிலும் எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி :

எபி 13:8 இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, விண்ணக அருளடையாளங்களை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: என்றும் கன்னியான உம் திருமகனின் தாயும் திரு அவையின் அன்னையுமான மரியாவை அறிக்கையிடுவதில் மகிழ்வுறும் நாங்கள் நிலைவாழ்வை நோக்கி முன்னேறிச் செல்ல இவ்வருளடையாளங்கள் எம்மை வழிநடத்துவனவாக. எங்கள்.

Comments