Sunday, 9 April 2023

உயிர்ப்பு ஞாயிறு 09/04/2023

உயிர்ப்பு ஞாயிறு 09/04/2023



 முன்னுரை.

ஆண்டவர் தோற்றவித்த வெற்றியின் நாள் இதுவே: இன்று அக்களிப்போம்:

அகமகிழ்வோம்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! விடுதலை வாழ்வை வழங்கும்

நம் இறைவனின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இன்று உயிர்ப்பு ஞாயிறு.

இயேசு உயிர்த்து விட்டார்-அல்லேலூயா சாவு வீழ்ந்தது! இருள் அழிந்தது!

அடிமைத்தனம் அகன்றது! அருள் வாழ்வு கிடைத்தது அதனால் புது வாழ்வு

நாம் பெற்றோம். துன்புறும் இதயங்களுக்கு இயேசு இறந் தார் என்ற செய்தியை

விட இயேசு மீண்டும் உயிர்த்தார் என்ற செய்திதான் அதிகமாக ஆறுதலைக்

கொடுக் கும். நம்பிக்கை இழந்த உறவுகளை புதுப்பித்து புது நம்பிக்கையை

ஊட்ட இயேசு உயிர்த்துவிட்டார். கல் லறை வாழ்வு காலியாகிவிட்டது,

காரிருளின் வாழ்வில் உயிர்ப்பு மலர்ந்தது. இனி அழுகையில்லை, தோல்வி

யில்லை. அனைத்தையும் புதுப்படைப்பாக்கும் எம் தெய்வம் இயேசு உயிர்பெற்று

எழுந்துவிட்டார். நமது வாழ் வில் நடந்த எல்லாவற்றையும் நீக்கிவிட்டு

உயிர்பெற்ற இயேசுவோடு புதுப்பாடைப்பாவோம். கிறிஸ்துவை அறிந்து

கொள்வோம்-புதுச்சமுதாயம் உருவாக்க நாம் உயிர்பெற்று எழுந்து

விட்டோம். இனி என்றும் சாகாத இயேசு என்னோடு வருகிறார் என்னில்

அவர் இருந்து செயலாற்றும் அனைத்தையும் நாமும் இணைந்து

செயல்படுவோம்.

மன்றாட்டுக்கள்.

1. இஸ்ராயேலரை விடுவிக்க மோசேக்கும், ஆரோனுக்கும் ஆற்றல்

அளித்த இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் ,

பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் இக்காலத்தில் மக்களுக்கு

நம்பிக்கையூட்டுபவர்களாகவும் உமது திட்டங்களை சரியான நேரத்தில்

சரியான முறையில் விளக்கிக் கூறுபவர்களாகவும் இருக்கவும்: தூய

ஆவியின் அருளையும் உடல் நலனையும் வர்களுக்கு அளித்தருள

வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. விடுதலையின் தெய்வமே இறைவா! இன்று உலக நாடு முழுமையும் இடம்

பெயர்ந்து , அகதிகளாகி அல்லலுறும் அனைத்து மக்கள்மீதும் மனமிரங்கி

அவர்களின் கண்ணீரைத் துடைத்து, அவர்கள் அனைவரும் தமது சொந்த

இடங்களிலே நிம்மதியாக வாழவும்: உலகிலே அடக்குமுறைகள் அழிந்து:

அன்பும் , மனிதநேயமும் , நீதியும் நிலைபெறச் செய்தருள வேண்டுமென்று

இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஒருவர் ஒருவரின் சுமைகளைத் தாங்கிக் கொள்ள சமூக உறவை

உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா! எமது சமூகத்திற்காக உம்மிடம்

இரந்து வருகின்றோம். இன்றைய நாட்களில் சமூக உறவுக்கும்

ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத்

தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து நாம் அனைவரும் ஒரே

உள்ளமும் , ஒரே மனமும் உடையவர்களாச் செயற்பட்டு இறையரசின்

கருவிகளாகவும் , சமாதானத்தின் தூதுவர்களாகவும் , உமது

சாட்சிகளாகவும் செயற்பட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை

மன்றாடுகின்றோம்.

4. கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே! நோயினால் வாடுவோர்,

தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும்

கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர்

அனைவரையும் உமது கருணையினாலும் , இரக்கத்தினாலும் நிறைத்து

அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் , நிம்மதியையும் அளித்துக்

காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...