Friday, 22 November 2019

திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு 22-12-2019

 திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு



திருப்பலிக்கான திருவுடை: ஊதா

வருகைப் பல்லவி

வானங்கள் மேலிருந்து பொழியட்டும் மேகங்கள் நீதிமானைப் பொழியட்டும் நிலம் திறக்க மீட்பர் தோன்றட்டும்

எசா 45:8.

'உன்னதங்களிலே' சொல்லப்படுவதில்லை.

முன்னுரை

இன்றைய புதிய நாளிலே புதிய எண்ணங்களோடும், புதிய சிந்தனைகளோடும், புதிய உறவுகளாய் இறை அருள் வேண்டி வந்திருக்கும் அன்பு உறவுகளே! இன்று திருவருகைக் காலம் நான்காவது ஞாயிறு வாரத்திற்குள்ளே நுழைகின்றோம். ஏசாயாவினுடையா அறிவிப்பு மன்னன் ஆகாசுக்கு ஓர் அடையாளத்தினூடாக நம்பிக்கையை கொடுத்தது. இந்த நம்பிக்கை தான் மத்தேயு நற்செய்தியாளர் பிறக்க இருக்கும் இறைமகன் ஒரு மெசியாவாக, இம்மானுவேலாக அதாவது 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' எனும் மறைபொருளை அழகான முறையில் வெளிப்படுத்துகின்றார். புனித பவுலினுடைய சான்று, 'நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும்; இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்' எனும் உண்மையை உறுதிப்படுத்துகின்றார். கடவுள் வரலாற்று நிகழ்வுகளில் மட்டும் இடம்பெற்றவர் அல்ல் மாறாக தனது மகனை இவ்வுலகிற்கு அனுப்பும் அளவிற்கு இவ்வுலகின் மேல் அன்பு கொண்டவர். ஆதிப்பெற்றோரின் பாவத்தினால் இவ்வுலகை அழிக்க சித்தம் கொள்ளவில்லை, மாறாக கிறிஸ்துவினூடாக தன்னை அறியவும் அன்பு செய்யவும் திட்டம் கொண்டார். இன்றைய வாசகங்களின் இதை நிறுவிக்கவே எமக்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, கிறிஸ்துவின் பிறப்பை எதிர்கொள்ள, முழுமையாக அனுபவிக்க, நம்பிக்கையோடு செயல்பட எம்மை தொடரும் இப்பலியோடு இணைத்துக்கொள்வோம்.

முதலாம் இறைவாக்கு: ஏசாயா: 7: 10-14

பதிலுரைப்பாடல்: 24: 1-6: ஆண்டவர் எழுந்தருள்வார், மாட்சிமிகு மன்னர் இவரே.

இரண்டாம் இறைவாக்கு: உரோமையர்: 1:1-7

நற்செய்தி இறைவாக்கு: மத்தேயு: 1:18-24

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, உமது அருளை எங்கள் மனங்களில் பொழிந்தருள உம்மை வேண்டுகின்றோம்: உம் திருமகன் மனிதர் ஆனதை வானதூதர் வழியாக நாங்கள் அறிந்திருக்கின்றோம் அவருடைய பாடுகளினாலும் சிலுவையினாலும் உயிர்ப்பின் மாட்சி பெற நீர் எங்களை அழைத்துச் செல்வீராக. உம்மோடு.

'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படும்.


விசுவாசிகள் மன்றாட்டு

குரு: இம்மானுவேலாக பிறக்க இருக்கும் எமது இயேசு, எம்மை மீட்கவும் எம்மை பாவத்தில் இருந்து விடுவிக்க பேரொளியாக துங்கும் அவரிடம்; எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.

1. அன்பின் ஆண்டவரே! உமது நற்செய்தியை பறைசாற்றும் எமது அருட்பணியாளர்கள் அனைவரும் உமது பிறப்பை அறிவிக்கும் அன்பு சீடர்களாக மாறிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இறைவா! உமது வருகைக்காக எம்மை தகுந்த முறையில் ஆயத்தம் செய்துகொண்டிருக்கும் நாம் உம்மை அறிந்து அறிவிக்கவும், நீர் எம்மை மீட்க வந்துள்ளீர் என்று ஏற்றுக்கொண்டு வாழ்ந்து பிறரை வாழ்விக்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இறைவா! இவ்வுலகின் ஏழைகள், வறியவர்கள், துன்பப்படுவோர், அநாதைகள், வைத்தியசாலையிலும், சிறச்சாலையிலும் தவிப்போருக்கும் உமது பிறப்பின் செய்தி நம்பிக்கையையும், மன மகிழ்வையும் கொண்டுவர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஆண்டவரே! நீர் படைத்த இந்த அழகான உலகிலே வரட்சியும், வறுமையும், கொடுமைகளும், துன்பங்களும், கொலைகளும், வன்முறைகளும் நடந்தேறிக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் நீர் பிறக்கும் போது இவற்றினால் துன்புறும் மக்களை கைவிட்டுவிடாமல் உமது பரிவிரக்கத்தினாலும் அன்பினாலும் எம்மை மீட்டருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குரு: அன்பின் இறைவா! ஆவலுடன் எதிர்பார்க்கும் உமது பிறப்பிற்காக எம்மை தயார்ப்படுத்தியருளும். இருளின் மத்தியில் ஒளியாகவும், தடைகளின் மத்தியில் பாதையாகவும், துயரங்கள் மத்தியில் ஆறுதலாகவும் இருக்க செய்தருளும். உம்மை கண்டு வாழ்வதில் மகிழ்ச்சி கொண்டு பிறரையும் உமது கருவியாக மாற்றியருளும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித மரியாவின் திருவயிற்றைத் தூய ஆவியார் தமது வல்லமையால் நிரப்பினார் உமது பீடத்தின்மேல் வைக்கப்பட்டுள்ள இக்காணிக்கையையும் அவரே புனிதப்படுத்துவாராக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை II

திருவிருந்துப் பல்லவி :

இதோ! கன்னி கருவுறுவார் ஒரு மகனைப் பெற்றெடுப்பார் அவர் பெயர் 'இம்மானுவேல்' என அழைக்கப்படும்

எசா 7:14.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, நிலையான மீட்பின் உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: மீட்பு அளிக்கும் திருநாள் நெருங்கி வரும் இவ்வேளையில் நாங்கள் மேன்மேலும் இறைப்பற்றுடன் உம் திருமகனுடைய பிறப்பின் மறைநிகழ்வைத் தகுதியான முறையில் கொண்டாட முன்னேறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...